search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்"

    டாக்காவில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. #IND19vSL19 #U19AsiaCup
    துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    அதன்பின் தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. வங்காள தேசம் டாக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால் (85) , அனுஜ் ராவத் (57) ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் சிம்ரான் சிங், ஆயுஷ் படோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. படோனி 28 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன்களும், சிம்ரான் சிங் 37 பந்தில் 3 பவுண்டர, 4 சிக்சருடன் 65 ரன்களும் விளாசினார்கள்.



    பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை இளைஞர்கள் சீரான இடைவெளியில் வெளியேறினார்கள். ஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுக்கள் வீழ்த்த, இலங்கை அணி 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இலங்கை அணியில் பெர்னாண்டே 49 ரன்களும், பரனவிதனா 48 ரன்களும், சூரியபண்டாரா 31 ரன்களும் சேர்த்தனர்.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #IND19vSL19
    துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    அதன்பின் தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள்.

    இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். அதேசமயம் அதிரடியாக ரன்கள் குவிக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்தது. 79 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ராவத் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஜெய்ஸ்வால் 113 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 85 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் தனது பங்கிற்கு 43 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.



    கேப்டனும் விக்கெட் கீப்பரும் ஆன சிம்ரான் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஆயுஷ் படோனியும் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. படோனி 28 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன்களும், சிம்ரான் சிங் 37 பந்தில் 3 பவுண்டர, 4 சிக்சருடன் 65 ரன்களும் விளாசினார்கள். பின்னர் 304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்க இருக்கிறது.
    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #U19AsiaCup #India #Bangladesh
    டாக்கா:

    8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் 172 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 37 ரன்னும், சமீர் சவுத்ரி 36 ரன்னும், அனுஜ் ரவாத் 35 ரன்னும் எடுத்தனர்.



    பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. 6-வது விக்கெட் இணையான ஷமிம் ஹூசைன் (59 ரன்கள்), அக்பர் அலி (45 ரன்கள்) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர்.

    கடைசி 4 ஓவர்களில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடைசி விக்கெட்டாக மின்ஹாஜூர் ரகுமான் (6 ரன்) ரன்-அவுட் ஆனார். முடிவில் வங்காளதேச அணி 46.2 ஓவர்களில் 170 ரன்னில் ஆட்டம் இழந்து. இதனால் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் மொகித் ஜங்ரா, சித்தார்த் தேசாய் தலா 3 விக்கெட்டும், ஹர்ஷ் தியாகி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    டாக்காவில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.  #U19AsiaCup #India #Bangladesh

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. #U19AsiaCup #YashaviJaiswal #India #Victory #Afghanistan
    டாக்கா:

    8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 45.3 ஓவர்களில் 221 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. யஷாஸ்வி ஜெய்ஸ்வால் (92 ரன், 93 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), அயுஷ் படோனி (65 ரன்) அரைசதம் விளாசினர்.

    அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரமனுல்லா குர்பாஸ் (37 ரன்), ரியாஸ் ஹூசைன் (47 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் அளித்த போதிலும் அடுத்து வந்த வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த அணி 45.4 ஓவர்களில் 170 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் தேசாய் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷ் தியாகி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் (பி பிரிவு) பாகிஸ்தானை சாய்த்தது.

    லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா (6 புள்ளி), ஆப்கானிஸ்தான் (4 புள்ளி), ‘பி’ பிரிவில் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. பாகிஸ்தான் அணி (ஒரு வெற்றி, 2 தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போல் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் அணிகளும் நடையை கட்டின.

    டாக்காவில் நாளை நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. 5-ந்தேதி நடக்கும் 2-வது அரைஇறுதியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. 7-ந்தேதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது.  #U19AsiaCup #YashaviJaiswal #India #Victory #Afghanistan
    ×